2010-02-17 15:23:12

இங்கிலாந்து கத்தோலிக்கர்கள் திருப்பீடத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதை பிரித்தானிய அரசு தடை செய்து வந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவு – இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் Tony Blair


பிப்.17,2010 இங்கிலாந்து கத்தோலிக்கர்கள் திருப்பீடத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதை வரலாற்றில் பிரித்தானிய அரசு தடை செய்து வந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவு என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் Tony Blair கூறியுள்ளார்.
இப்புதனன்று வட அயர்லாந்தின் BBC நிறுவனம் "வத்திக்கானில் நம் மனிதர்" (Our Man in the Vatican) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Tony Blair இவ்வாறு கூறியள்ளார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்திலுள்ள பல்லாயிரம் கத்தோலிக்கர்களின் சார்பில் ஒரு பிரதிநிதி வத்திக்கானில் இருப்பதை இத்தனை ஆண்டுகளாக பிரித்தானிய அரசு தடை செய்து வந்துள்ளது அறிவு பூர்வமான ஒரு செயலாகத் தனக்குத் தெரியவில்லை என்று முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.
நாம் வாழும் இன்றைய சூழலில், மதம் அகில உலகத் தொடர்புகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அதிலும் சிறப்பாக வத்திக்கான்  விசுவாசம் அரசியல் இரண்டையும் சரிவர சமன் செய்யும் ஒரு சக்தியாக இன்றைய உலகில் இருப்பதால் வத்திக்கானுடன் இந்த உறவை மீண்டும் புதுப்பிப்பது இங்கிலாந்துக்கு நல்லது என்றும் Tony Blair கூறியுள்ளார்.இங்கிலாந்து, 1497ல் திருப்பீடத்துடன் அரசுபூர்வமான தொடர்புகளை ஆரம்பித்தது என்பதும், மன்னன் எட்டாம் ஹென்றி காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டன என்பதும், அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளால் இந்தத் தொடர்பு மீண்டும் நிலைநாட்டப்பட்டபோதிலும், 1917ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தொடர்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.