2010-02-16 17:06:25

தவக்காலத்தில் ஏழைகளின் பசியாற்ற மனிலா பேராயர் அழைப்பு


பிப்.16,2010 தவக்காலத்தில் நோன்பு இருப்பதன் மூலம் சேமிக்கப்படும் பணம் ஏழைகளின் பசியாற்ற உதவும் என மனிலா பேராயர் கர்தினால் கவ்தென்சியோ ரோசாலெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இப்புதனன்று துவங்கும் தவக்காலத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பிலிப்பைன்ஸ் கர்தினால் கத்தோலிக்கர்கள் இத்தவக்காலத்தில் உண்ணாநோன்பு மூலம் மிச்சப்படுத்தும் பணத்தை ஏழைச்சிறாரின் பசியாற்ற செலவிட வேண்டும் என அதில் விண்ணப்பித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் ஹபாக் ஆசா என்ற அமைப்பு தானஉ் தொடங்கப்பட்டதன் இந்த நான்கு ஆண்டு காலத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்கியுள்ளது என்ற கர்தினால், இவ்வாண்டில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் குழந்தைகளின் பசியாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பத்துக்கு மூன்று குழந்தைகள் பசியாலும் போதிய சத்துணவின்மையாலும் வாடுவதாகவும் தேசிய புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்தார் கர்தினால் ரோசாலெஸ்.








All the contents on this site are copyrighted ©.