2010-02-15 15:26:59

பிப்ரவரி 16 நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3 நான் வாசித்த தகவல் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அன்றைய வேலையை முடித்த இளைஞன் ஒருவன், அந்த உணவு விடுதிக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தான். தெருவில் 100 ரூபாய் நோட்டு ஒன்று அவன் கண்ணில் பட்டது. அங்குமிங்கும் பார்த்தான். அதைத் தேடி யாரும் வரவில்லை. எனவே அதை எடுத்துத் தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான். பின்னர் தனது இரண்டு சக்கர மோட்டார் வண்டியை நிறுத்தியிருந்த இடத்துக்குப் போனான். ஆனால் அவ்விடத்தில் அதைக் காணவில்லை. ஒன்றும் புரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்த போது, நடைபாதையில் உட்கார்ந்திருந்த ஒரு சாது சொன்னார் - 'இங்கே வண்டிகளை நிறுத்தக் கூடாது என்று சொல்லி காவல்துறை அதை இழுத்துக் கொண்டு போய்விட்டது' என்று. அப்போது அவனுக்குத் தான் எடுத்த பணம் நினைவுக்கு வந்தது. 'தெருவில் கிடந்த அந்தப் பணம் வேறு ஒருவருடையது. அதை எடுத்ததால்தான் இப்போது செலவு வந்துவிட்டது' என்று பயந்து, அந்தப் பணத்தை எடுத்து சாதுவின் தட்டில் போட்டான். சாது சொன்னார், 'நீ எடுத்தது பாவமும் இல்லை. எனக்குக் கொடுத்தது புண்ணியமும் இல்லை.' என்று.

ஆம். உண்மையில், ஒரு செயலைவிட அதன் நோக்கம்தான் அதன் பலனைத் தீர்மானிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.