2010-02-15 16:41:35

பாகிஸ்தானில் குற்றவாளி வழக்குரைஞர் ஒருவர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து கிறிஸ்தவ சபைகள் அதிர்ச்சி


பிப்.15,2010 பாகிஸ்தானில் 12 வயது கத்தோலிக்கச் சிறுமியைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்த வழக்குரைஞர் ஒருவர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளன பாகிஸ்தான் கிறிஸ்தவ சபைகள்.

லாகூர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் அவையின் முன்னாள் தலைவரான கொலையாளி நயீம் சௌத்ரி லாகூர் நீதிமன்றத்தால் பிணையத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட Presbytarian சபை ஆயர் Timotheus Nasir இக்கொலையாளிக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள், காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசு ஒன்றிணைந்து செயல்பட்டதைக் காணமுடிகிறது என்றார்.

ஏழைகளுக்கும், சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பாகிஸ்தானில் நீதி மறுக்கப்படுவது குறித்து அந்நாட்டு சட்ட உதவி மையத்தின் இயக்குனர் ஜோசப் பிரான்சிஸ், லாகூர் பெருமறை மாவட்ட குருகுல முதல்வர் குரு Andrew Nisari, மற்றும் ஆங்கிலிக்கன் சபை பணியாளர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.