2010-02-13 16:16:34

சிறார் கட்டாயமாகப் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவது நிறுத்தபப்ட ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


பிப்.13,2010 சிறார் கட்டாயமாகப் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்படுவது, இன்றைய உலகில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களில் மிகவும் திகைக்க வைக்கின்ற செயல்களில் ஒன்றாக இருக்கின்றது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

இவ்வெள்ளியன்று ஐ.நா.தலைமையகத்தில் சிறார் படைவீரர் ஒழிப்பு குறித்த சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய மூன், சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் பயன்படுத்தப்படும் மற்றும் படையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து சிறாரும் விடுதலை செய்யப்படும் வரை நாம் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்றும் உலகினரைக் கேட்டுக் கொண்டார்.

தற்சமயம் உலகில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 2,50 000 சிறார் படைவீரர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் பத்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்று ஐ.நா.கூறியுள்ளது.

கொலம்பியாவில் 8,000 முதல் 14,000 வரையிலான சிறார் படைவீரர்கள் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.