2010-02-13 16:15:52

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு கானடா ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் வரவேற்பு


பிப்.13,2010 கானடாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை வரவேற்றுள்ள அதேவேளை, இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளின் மனித மதிப்பீடுகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார் கானடா நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Pierre Morissette.
இந்த விளையாட்டுகளுக்கு வருகை தந்திருக்கும் அனைவரும், விளையாட்டுகள் முன்வைக்கும் மதிப்பீடுகளை நினைவில் கொள்வார்கள் என்ற தனது நம்பிக்கையையும் ஆயர் Morissette தெரிவித்துள்ளார்
இத்தகைய நிகழ்வுகளின் போது இடம் பெறும் மனித வியாபாரம் குறித்து கத்தோலிக்கர் விழிப்புணர்வு கொள்ளுமாறும் கானடா ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கானடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவரில் இவ்வெள்ளியன்று (பிப்ரவரி 12) தொடங்கியுள்ள 21வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 28ம் தேதிவரை நடைபெறும். இதில் 21 ஆசிய நாடுகள் உட்பட 82 நாடுகளின் ஏறத்தாழ 2500 வீரர்கள் பங்கு பெறுகின்றனர். இதற்கு சீனா அதிகமான வீரர்களை அனுப்பியுள்ளது. மேலும், இவ்விளையாட்டுகளைக் காண அறுபதாயிரத்துக்கு அதிகமான பார்வையாளர்கள் சென்றுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன







All the contents on this site are copyrighted ©.