2010-02-12 17:00:57

வடகிழக்கு இந்தியாவில் சுமார் 410 போராளிகள் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர்


பிப்.12,2010 வடகிழக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட KNLF என்ற அமைப்பின் சுமார் 410 போராளிகள் தங்கள் ஆயுதங்களுடன் இவ்வியாழனன்று சரணடைந்துள்ளனர்.

இதன்மூலம் அப்பகுதியில் அமைதி இடம் பெறுவதற்கான நம்பிக்கைகள் பிறந்துள்ளன என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.

இது குறித்து கருத்து தெரிவித்த UCF என்ற கிறிஸ்தவ ஐக்கிய கழகத்தின் அருள்திரு தாமஸ் மாங்காட்டுதழே, வடகிழக்கு இந்திய மாநிலங்களின் வரலாற்றில் இது வரலாற்று சிறப்புமிக்கது என்று கூறினார்.

22 பெண்கள் உட்பட சுமார் 410 பேர் அசாம் முதலமைச்சர் Taru Gogoi முன்னிலையில் ஆயுதங்களுடன் சரணடைந்த நிகழ்வைத் தான் நேரில் கண்டதாகக் கூறினார் அருள்திரு தாமஸ்.








All the contents on this site are copyrighted ©.