2010-02-12 17:00:01

இலங்கையில் குடிமக்கள் அனைவரும் அமைதி காக்குமாறு ஆயர்கள் அழைப்பு


பிப்.12,2010 இலங்கையில் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு நாட்டில் பதட்டநிலைகள் காணப்படும் வேளை, குடிமக்கள் அனைவரும் அமைதி காக்குமாறு அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றுப்போன சரத்பொன்சேகா ஆதரவாளர்களுக்கும் அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ச ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்றதையடுத்து நாட்டின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவசபை ஆயர்கள் அமைதிக்குக் குரல் கொடுத்துள்ளனர்.

தமிழ் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பின்னான வன்முறைகள் நிறுத்தப்படவும் கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சரத் பொன்சேகாவின் கைது குறித்து இலங்கையின் புத்த மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா மரண தண்டனைக்கான சாத்தியக்கூறையும் எதிர் நோக்கியுள்ளதாக இலண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.