2010-02-11 16:10:23

பி.டி.கத்தரிக்காய்களைக் குறித்த இந்திய அரசின் முடிவைத் தான் பெரிதும் வரவேற்பதாக காஞ்சிரப்பள்ளி ஆயர் மாத்யூ அரக்கல்


பிப்.11,2010 மரபணு மாற்றம் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பி.டி.கத்தரிக்காய்களை வர்த்தக ரீதியாக இந்தியாவில் அனுமதிப்பதில்லை என்ற இந்திய அரசின் முடிவைத் தான் பெரிதும் வரவேற்பதாக காஞ்சிரப்பள்ளி ஆயர் மாத்யூ அரக்கல் கூறியுள்ளார்.
இயற்கை உரங்களைக் கொண்டு பயிர்களை வளர்ப்பதே இந்தியாவுக்குச் சிறந்த வழி என்று கடந்த முப்பது ஆண்டுகளாகக் கூறி வரும் ஆயர் அரக்கல், அரசின் இந்த முடிவு மட்டும் இந்திய உணவு பற்றாக் குறைக்கு தீர்வு ஆகாது என்றும், வரும் காலங்களில் இந்தியா இயற்கை உரங்களின் அடிப்படையில் நம் விவசாயத்தை வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்துவதே இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகும் என்றும் கூறினார். ஒதுக்கப்பட்ட சிறு விவசாயிகளுக்கென இடுக்கி மாவட்டத்தில் சங்கம் ஒன்றை 1980ல் ஆரம்பித்த ஆயர் அரக்கல், மரபணு மாற்றங்கள் செய்யப்படும் பயிர்களை சாகுபடி செய்வதால், சிறு விவசாயிகளின் நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறதென்றும், இதனால் நாட்டின் உணவு பற்றாக் குறை இன்னும் அதிகமாகும் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.