2010-02-11 16:09:51

சீன புத்தாண்டுக்கென ஹாங் காங் கத்தோலிக்க ஆயர் உட்பட ஆறு மதங்களைச் சார்ந்த தலைவர்கள் இணைந்து அனுப்பியுள்ள செய்தி


பிப்.11,2010 சுய நலத்தில் அதிகம் சிக்கியுள்ள இளையோர் பெற்றோர், ஆசிரியர் என பெரியவர்கள் மீது மதிப்பு கொள்ளவும், அதனால் தங்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேறவும் இந்த புத்தாண்டு நல்லதொரு ஆண்டாக இருக்க வேண்டுமென ஹாங் காங்கின் ஆறு மதத் தலைவர்கள்  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஞாயிறன்று ஆரம்பமாகும் சீன புத்தாண்டுக்கென ஹாங் காங் கத்தோலிக்க ஆயர் John Tong, லூத்தரன் ஆயர் Nicholas Tai Ho-fai உட்பட முஸ்லிம், புத்தம், Tao என்று ஆறு மதங்களைச் சார்ந்த தலைவர்கள் இணைந்து அனுப்பியுள்ள சீன புத்தாண்டு செய்தியில் அனைத்து மக்களும் நன்றி, மன்னிப்பு, அன்பு ஆகிய உயர்ந்த பண்புகளுடன் புதிய ஆண்டில் முன்னேற்றங்கள் பல காண வேண்டும் என வாழ்த்தியுள்ளனர். ஹாங் காங்கில் இளையோர் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு, தற்கொலை ஆகிய கவலை தரும் போக்குகள் அதிகமாகியிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள இம்மதத் தலைவர்கள், குடும்பத்திற்கும், பள்ளிகளின் கட்டுப்பாடுகளுக்கும் நம் இளையோர் பணிந்து வாழ பழகிக் கொள்ளும்போது, பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.