2010-02-11 16:08:20

அகில உலக நோயுற்றோர் தினத்தையொட்டி கத்தோலிக்க திருச்சபை மேற்கொண்டுள்ள நலப்பணிகளைத் தொகுத்து  வத்திக்கான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை


பிப்.11,2010 இவ்வியாழனன்று அனுசரிக்கப்படும் 18வது அகில உலக நோயுற்றோர் தினத்தையொட்டி, கத்தோலிக்க திருச்சபை உலகெங்கும் மேற்கொண்டுள்ள சமூகப் பணி, மற்றும் நோயுற்றோருக்கான நலப்பணி ஆகியவைகளைத் தொகுத்து  Fides எனும் வத்திக்கான் செய்தி நிறுவனம் இப்புதனன்று அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில், திருச்சபை உலகெங்கும் 5,378 பெரும் மருத்துவ மனைகளையும், 18,088 சிறு மருத்துவமனைகளையும் நடத்தி வருகின்றது என்றும், பெரிய மருத்துவ மனைகளில் பெரும்பாலானவை அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அமைந்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. சிறிய மருத்துவமனைகளில் 5,373 ஆப்ரிக்காவிலும், 3,532 ஆசியாவிலும் அமைந்துள்ளன என்றும் இவ்வறிக்கை கூறுகிறது. இவைகளன்றி, திருச்சபை நடத்தும் 521 தொழுநோயாளர் நிலையங்களில் 293 ஆசியாவிலும், 186 ஆப்ரிக்காவிலும் உள்ளன.
மேலும் முதியோரைப் பராமரிக்கும் பணிக்கென 15,488 இல்லங்களையும், அனாதைக் குழந்தைகளைப் பேணும் பணிக்கென 9,376 இல்லங்களையும் திருச்சபை நடத்தி வருவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. http://www.fides.org என்ற இணையதளத்தில் இவ்வறிக்கையின் முழு விவரங்கள் காணக் கிடக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.