2010-02-10 15:54:42

கடல் தொழிலாளிகள் மற்றும் மீனவர்களின் நிலை குறித்து பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ


பிப்.10,2010 கடல் தொழிலாளிகள் மற்றும் மீனவர்கள் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாய் இருப்பதால் அவர்களுக்கான மேய்ப்புப்பணிகளில் புதிய அணுகுமுறைகள் கையாளப்பட வேண்டியது உடனடித் தேவையாக இருக்கின்றது என்று திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்கான மேய்ப்புப்பணி அவைச் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ கூறினார்.
கடல் தொழிலாளிகள் மற்றும் மீனவர்களுக்கான அப்போஸ்தலப் பணி குறித்த சர்வதேச குழு உரோமையில் நடத்தும் ஆறாவது கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் மர்க்கெத்தோ, தற்சமயம் பலநாடுகளில் மீன்பிடித் தொழில் ஆபத்தானதாக மாறி வருகிறது என்று கூறினார்.
உலகில் மூன்று கோடிக்கு மேற்பட்ட மீனவர்கள் இருக்கின்றனர், இவர்களில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பேர் மீன்பிடிக் கலங்களில் முழு நேரப் பணியாளர்களாக இருக்கின்றனர் என்றும் பேராயர் கூறினார்.
பழங்காலத்திலிருந்தே மனித சமுதாய்ததிற்கு மீன் முக்கிய உணவாக இருந்து வந்துள்ளது, எனினும் தற்போதைய புதிய தொழிற்நுட்ப மீன்பிடி வளர்ச்சிகளும் உலகப் பொருளாதாரக் கொள்கையும் பல மீனவர்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் பேராயர் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.