2010-02-10 15:54:20

அனைத்திந்திய குருக்கள் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் கர்தினால் Hummes


பிப்.10,2010 இந்திய திருச்சபை குருக்களுக்கென ஏற்பாடு செய்துள்ள மாநாடு மிகவும் வரவேற்கத் தக்க ஒரு முயற்சியென்றும், இந்த முயற்சிக்குத் திருத்தந்தை தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கியுள்ளார் என்றும் கர்தினால் Claudio Hummes கூறினார்.
இச்செவ்வாயன்று வேளாங்கண்ணியில் அனைத்திந்திய குருக்கள் மாநாட்டை திருப்பலி நிறைவேற்றி, குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்த கர்தினால் Hummes இவ்வாறு கூறினார். லத்தீன் ரீதி ஆயர்கள் மற்றும் குருக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், லத்தீன், சிரோ மலபார், சிரோ மலங்காரா என்ற மூன்று ரீதி ஆயர்கள், குருக்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.இத்துவக்க விழாவில் சென்னை மயிலை பேராயர், தஞ்சாவூர் ஆயர் உட்பட பல ஆயர்கள், அரசியல் தலைவர்கள், சமுதாய இயக்கத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற ஆரோக்கிய அன்னை பசிலிக்காவில் நடைபெற்ற ஆரம்பத் திருப்பலியில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட குருக்களைக் கண்ட உள்ளூர் மக்கள் தாங்கள் இதுவரை இத்தனை குருக்களை ஒரே நேரத்தில் பார்த்த தில்லை என வியப்புடன் கூறினர்.







All the contents on this site are copyrighted ©.