2010-02-10 15:56:13

The Lord’s Resistance Army (LRA) குறித்த பல தகவல்களை Comboni மறை போதக சபையின் அருட்தந்தை ஒருவர் முதன் முதலாக வெளியிட்டுள்ளார்


பிப்.10,2010 ஆப்ரிக்காவின் காங்கோ  பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மக்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வரும் The Lord’s Resistance Army (LRA) என்ற வன்முறை கும்பல் குறித்த பல தகவல்களை Comboni மறை போதக சபையின் அருட்தந்தை ஒருவர் முதன் முதலாக வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு கருதி தன் பெயரை வெளியிட விரும்பாத அந்த குரு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், இந்த வன்முறை கும்பலால் கடந்த ஆண்டு மட்டும் 100 பேருக்கு மேல் கொல்லப் பட்டுள்ளனர் என்றும், இவர்களது வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ள 4000 பேருக்கும் மேற்பட்டோருக்கு Caritas போன்ற உதவி நிறுவனங்கள் சேவை செய்து வருகின்றன என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இந்த வன்முறை கும்பல் ஆக்கிரமித்துள்ள 50 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க தனக்கு நான்கு நாட்கள் ஆயின என்றும், இவர்களது வன்முறைச் செயல்களால் அந்தப் பகுதியில் நடைபெற்ற உலக உணவு உதவி எனும் (World Food Programme ) திட்டம் கைவிடப் பட்டதென்றும் அருட்தந்தை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.