2010-02-09 16:06:05

ஹெய்ட்டியின் கடன்களை இரத்து செய்ய முன்வந்துள்ள ஜி-7 நாடுகளுக்குப் பாராட்டு


பிப்.09,2010 நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாட்டின் தங்களுக்கான கடன்களை இரத்து செய்யவுள்ளதாக ஜி-7 என்ற ஏழு வளர்ந்த நாடுகள் அறிவித்துள்ளது குறித்து உலக கிறிஸ்தவ சபைகள் அவை தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இக்கடன் நீக்கம் குறித்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவற்றின் நிதி அமைச்சர்களுக்கு நன்றிக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவ்வவையின் பொதுச் செயலர் குரு Olav Fykse Tveit, ஏனைய நிதி அமைப்புகளும் ஹெய்ட்டி நாட்டிற்கான உதவிகளை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
உலக நிதி நிறுவனம் ஹெய்ட்டி நாட்டிற்கானக் கடன்களை அகற்றுவதில் எவ்வித உறுதியான வாக்குறுதிகளையும் இதுவரை வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார் அவர்.
கடந்த மாதம் 12ம் தேதி ஹெய்ட்டி தலைநகரில் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் உயிரிழந்தனர், 2,50,000 பேர் காயமடைந்தனர் மற்றும் 15 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.







All the contents on this site are copyrighted ©.