2010-02-09 16:03:51

பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் வருங்காலத்தில் குழந்தைகளும் இன்றி வாழ்பவர்களே- I.O.R தலைமைப் பொறுப்பாளர்


பிப்.09,2010 பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் வங்கி மேலாளர்கள் அல்ல, மாறாக வருங்காலத்தில் நம்பிக்கையின்றி குழந்தைகளும் இன்றி

வாழ்பவர்களே என்று I.O.R என்ற சமயப் பணிகளுக்கான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் எத்தோரே கோத்தி தெதெஸ்கி கூறினார்.

குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது, உலக அளவிலான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஒரு காரணம் என்ற அவர், மேற்கத்திய நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பூஜ்யமாக இருப்பது சமுதாய அமைப்பு முறைகளில் மிக ஆழமான மாற்றங்களைக் கொணர்ந்துள்ளது என்றார்.

குழந்தை பிறப்பு விகிதம் குறைவு என்பது பொருளாதார உற்பத்திக்குக் காரணமான இளையோரின் குறைவைக் குறிப்பிடுகின்றது என்றும், அரசின் சமூகநலத் திட்டங்களைச் சார்ந்து இருக்கும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பையும் குறிப்பிடுகிறது என்றும் தெதெஸ்கி கூறினார்.

இளையோர்க்கு வேலையின்மையால் குடும்பங்கள் அமைவது காலதாமதமாகிறது, குடும்பங்கள் அமையாததால் மக்களிடையே பொறுப்புணர்வும் சேமிக்கும் பழக்கமும் குறைகிறது என்ற சமயப் பணிகளுக்கான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர், மக்கள் தொகை பெருக்கமின்மை காரணமாக ஒரு நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மிகவும் கவலை தருவதாக உள்ளது என்றார்.








All the contents on this site are copyrighted ©.