2010-02-09 16:03:40

தடுத்து நிறுத்தக்கூடிய நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைவால் உலகில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கின்றது-வத்திக்கான் உயர் அதிகாரி


பிப்.09,2010 தடுத்து நிறுத்தக்கூடிய நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைவால் உலகில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கின்றது என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.

ஏறத்தாழ 20 கோடிச் சிறார் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர், இவர்களில் பாதிப்பேரின் வாழ்வும் நலமும் அச்சுறுத்தலுக்கு உட்படுள்ளன, ஏறத்தாழ 10 இலட்சம் குழந்தைகள் கருவிலே கொல்லப்படுகின்றன என்றும் பேராயர் தொமாசி கூறினார்.

திருப்பீட குடும்ப அவை வத்திக்கானில் நடத்தும் 19வது ஆண்டுக் கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி இவ்வாறு தெரிவித்தார்.

10 கோடிச் சிறார்க்கு கல்வி பெற வசதியில்லை, 27 கோடிச் சிறார்க்கு மருத்துவ வசதியில்லை என்றும் உரைத்த பேராயர், தனது பிறரன்பு செயல்கள் மூலம் திருச்சபை எப்பொழுதும் சிராரின் கல்வி மற்றும் நலவாழ்வில் அக்கறை எடுத்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கானத் திருச்சபை மற்றும் பல பொதுநிலைத் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மூன்று நாள் கூட்டம் இப்புதனன்று நிறைவு பெறும்.








All the contents on this site are copyrighted ©.