2010-02-09 16:04:21

இலங்கையில் அரசியல் தொடர்புடைய வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்-கிறிஸ்தவசபைத் தலைவர்கள் அழைப்பு


பிப்.09,2010 இலங்கையில் அமைதியும் ஜனநாயகமும் நீடித்து நிலைக்க வேண்டுமெனில் அரசியல் தொடர்புடைய வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டுக் கிறிஸ்தவசபைத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம், மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு, திரிகோணமலை-மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை, அனுராதபுர ஆயர் நார்பெர்ட் ஆந்த்ராதி, ஆங்கிலிக்கன் ஆயர்கள் Illangasinghe, Duleep de Chickera ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலுக்குப் பின்னரும் வன்முறைகள் தொடர்வது குறித்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னர் தேர்தல் தொடர்புடைய 900 வன்முறை நிகழ்வுகளும், தேர்தலுக்குப் பின் 300 வன்முறை நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளதையும் ஆயர்களின் அறிக்கைச் சுட்டிக் காட்டியுள்ளது.
இதற்கிடையே, எதிர்க்கட்சி வேட்பாளராக இருந்து தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பல தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.