2010-02-09 16:04:33

அகிம்சா என்பது நவீன உலகின் மொழியாக மாற வேண்டும்- இத்தாலிய ஆயர்


பிப்.09,2010 போர் என்பது அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது மட்டும் அல்ல, மனிதாபிமானமும் அற்றது என்ற வகையில் அகிம்சா என்பது நவீன உலகின் மொழியாகவும் ஒப்புரவு என்பது வாழ்க்கை முறையாகவும் மாற வேண்டுமென இத்தாலிய ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.
இத்தாலிய பேக்ஸ்-கிறிஸ்டி அமைப்பின் தலைவரான ஆயர் ஜொவான்னி ஜூதிச்சி உரைக்கையில், ஆயுக்களைவு என்பது அடிப்படையான ஒன்று, இது அணுஆயுதம், வேதியல் ஆயுதம் ஆகியவைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
அகிம்சா என்பது தீமைகளுக்கு நம்மைக் கையளிப்பதல்ல, மாறாக தீமையை நன்மையால் வெல்வது எனவும் கூறினார் ஆயர்.
ஆயுத விற்பனையோடு தொடர்பில்லாத அதிக இலாபம் காணாத நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒப்புரவு என்பது நல்ல பலனைக் கொணர முடியும் எனவும் கூறிய இத்தாலிய ஆயர் ஜூதிச்சி, அமைதிக்கான மறைசாட்சிய வாழ்வுக்கு இன்றைய திருச்சபை அழைப்புப் பெறுகிறது என்றார்.







All the contents on this site are copyrighted ©.