2010-02-08 16:37:40

நாளும் ஒரு நல்லெண்ணம் பிப்.09,2010


RealAudioMP3 இராபர்ட் ஃபுல்டன் என்பவர் தான் கண்டுபிடித்த நீராவிப் படகை வெள்ளோட்டம் விடுமுன்னர் அதைப் பொதுமக்களுக்குக் காட்ட விரும்பினார். ஹட்சன் ஆற்றங்கரையில் அதனைக் காண்பித்துக் கொண்டிருந்த போது அதைப் பார்ப்பதற்கு பிற்போக்குவாதிகளும் சந்தேகப் பேர்வழிகளும் வந்தனர். அங்கு அவர்கள் இந்தப் படகு நகரவே நகராது என்று விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது நகரத் தொடங்கியது. ஆற்றின் நீரோட்டத்தில் அந்த நீராவிப்படகு மிதந்து மிதந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்தப் பிற்போக்குவாதிகள், இந்தப் படகை நிறுத்தவே முடியாது என்று கத்தத் தொடங்கினர். இப்படித்தான் சிலர் எதிலும் குறையையே பார்க்கிறார்கள். எதிர்மறை எண்ணமுடையவர் கண்களுக்குக் குறைகள்தான் எப்போதும் கண்ணில்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.