2010-02-06 15:30:09

விசாரணைக் குழு பரிந்துரை : மதத்திற்கு விரோதமாகப் பிரச்சனைகளை எழுப்பும் நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும்


பிப்.06,2010 இந்தியாவில் மதத்திற்கு விரோதமாக பிரச்சனைகளை எழுப்பும் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை குறித்து புலன்விசாரணை செய்யும் குழு பரிந்துரைத்துள்ளது.

கர்நாடக அரசுக்கு இவ்வாரத்தில் 500 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ள நீதிபதி B. K. Somasekhara தலைமையிலான குழு, எந்தவொரு மதத்திற்கு எதிராகப் போதிப்பவர்கள் மற்றும் அதற்கு எதிராகச் செயல்படுபம் நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

மதங்களுக்கு எதிரான தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தும் மற்றும் அவமதிக்கும் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 2008ம் ஆண்டில் மட்டும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எனக் குறைந்தது 24 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.