2010-02-06 15:32:07

யாழ்ப்பாண கோட்டையை புனரமைக்க நெதர்லாந்து அரசு நிதியுதவி


பிப்.06,2010 இலங்கையின் யாழ்ப்பாண கோட்டையை புனரமைக்க நெதர்லாந்து அரசு ஆறு கோடியே பதினோறு இலட்சம் ரூபாய்களை வழங்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட முதலாவது வேலைத்திட்டம், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் நடைபெறும் என்றும் அரசு அறிவித்தது.

இதுதவிர, நெதர்லாந்து அரசு, இலங்கையின் பல்வேறு திட்டங்களுக்காக மேலும் நிதியுதவியை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதற்கான தீர்மானம் இவ்வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

நாட்டின் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அரச உடைமைகளின் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாகப் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவிபி ஆகிய கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று ஊடகங்கள் கூறியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.