2010-02-05 16:32:40

நேபாளத்திலிருந்து குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை நிறுத்திவைக்கும்படி, உலக அமைப்பு ஒன்று பரிந்துரை


பிப்.05,2010 நேபாளத்திலிருந்து வெளிநாடுகளுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை நிறுத்திவைக்கும்படி, சரவதேச அளவில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை கண்காணிக்கும் உலக அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

நேபாள குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதனால் இந்த நடைமுறையை நிறுத்தவேண்டும் என்றும் இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளைவிட நேபாளத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவுதான் எனினும் அண்மைக்காலமாக இவ்வெண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவர்களில் பலர் அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள் என்றும் நேபாளத்தில் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் சர்வதேச தரத்தின் கீழ் அமையவில்லை என்றும் அச்சர்வதேச அமைப்பு கூறியுள்ளது

நாடுகளுக்கிடையில் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை முறைப்படுத்துவதற்காக 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹாக் ஒப்பந்தத்தில் நேபாளமும் கையொப்பமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.