2010-02-05 16:30:56

நாளும் ஒரு நல்லெண்ணம்.. பிப்ரவரி 06.


"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே

அது நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பினிலே'

பக்கம் பக்கமாக எழுதி, விடிய விடிய பேசிப் புரிய வைக்க வேண்டியதை அழகாக இரண்டே வரிகளில் நெற்றியில் அடித்தாற்போல் சொல்லியுள்ளார் கவிஞர்.

குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுக்க வேண்டாம். செல்லம் கொடுத்து கெடுத்த குழந்தைகள் ஏராளமானோர் ஏற்கனவே உள்ளனர்.

அன்பை வெளிப்படுத்துவதில் கூட ஓர் ஒழுங்கு நெறி இருக்க வேண்டும்.

அவர்களது கடமையில் இருந்து தவறும்போதோ அல்லது தவறு என்று தெரிந்தும் அதனை செய்யும்போதோ அது தவறு என்று எடுத்துக் கூற வேண்டியது அவசியம்.

மண்ணைப் பிசைந்து, பக்குவப்படுத்தி அழகிய, கலைநயமிக்க மண் பாண்டங்களை உருவாக்குவது போன்று, குழந்தையில் ஒழுக்க வடிவு தரும் குயவராய்,

குழந்தை நல் முறையில் வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும் தோட்டக்கராராய்,

நல்லது எது - கெட்டது எது, நற்குணங்கள் எவை, தீய குணங்கள் எவை என்பதை எடுத்துச் சொல்ல வழிகாட்டியாய்,

வெற்றி - தோல்விகளைக் கையாளும் பக்குவத்தை சொல்லிக் கொடுக்கும் ஆலோசகராய்,

எல்லாவற்றுக்கும் மேலாக ஓர் எடுத்துக்காட்டாய் செயல்பட வேண்டும் பெற்றோர்







All the contents on this site are copyrighted ©.