2010-02-05 16:10:53

நலவாழ்வுப் பணியாளர்க்கானத் திருப்பீட அவை தொடங்கப்பட்டதன் 25ம் ஆண்டை முன்னிட்டு அவ்வவை நடத்தவுள்ள முக்கிய நிகழ்வுகள்


பிப்.05,2010 நலவாழ்வுப் பணியாளர்க்கானத் திருப்பீட அவை தொடங்கப்பட்டதன் 25ம் ஆண்டை முன்னிட்டு அவ்வவை நடத்தவுள்ள முக்கிய நிகழ்வுகள் குறித்து நிருபர் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று வெளியிட்டது அவ்வவையின் தலைவர் பேராயர் சிக்மண்ட் சிமோவஸ்கி தலைமையிலான குழு.

இம்மாதம் 11ம் தேதி லூர்து அன்னை திருவிழாவன்று சிறப்பிக்கப்படும் 18வது உலக நோயாளர் தினம் பற்றியும் கூறிய பேராயர் சிமோவஸ்கி, அன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நோயாளிகளுக்கென வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார் என்றும் கூறினார்.

“நோயாளிகள் மீதான அன்புப்பணியில் திருச்சபை” என்ற தலைப்பில் இத்தினம் சிறப்பிக்கப்படுகின்றது என்றும் அவர் என்றுரைத்தார்.

நலவாழ்வுப் பணியாளர்க்கானத் திருப்பீட அவை தொடங்கப்பட்டதன் 25ம் ஆண்டை முன்னிட்டு இம்மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கில் 35 நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறினார் பேராயர்.

உலகில் ஒரு இலட்சத்து பதினேவாயிரம் கத்தோலிக்க நலவாழ்வு மையங்கள் இருக்கின்றன என்றும், இவற்றை இத்திருப்பீட அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் பியரன்சோ ஆஞ்சலினி ஒருங்கிணைத்து நடத்துகிறார் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டில் நலவாழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள குருக்களையும் பேராயர் சிக்மண்ட் சிமோவஸ்கி நினைவுகூர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.