2010-02-05 16:32:05

திருப்பீட உயர் அதிகாரி : சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில், ஏழ்மை ஒழிப்பு மற்றும் அனைவருக்கும் வேலைவாய்ப்புக் கூறுகளும் இணைக்கப்பட வேண்டும்


பிப்.05,2010 சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில், ஏழ்மை ஒழிப்பு மற்றும் அனைவருக்கும் தரமான வேலை உள்ளிட்ட முழு வேலைவாய்ப்புக் கூறுகளும் இணைக்கப்பட வேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.கூட்டத்தில் பரிந்துரைத்தார்.

நியுயார்க் ஐ.நா.தலைமையகத்தில் நடைபெற்ற சமூக முன்னேற்ற அவையின் 48வது அமர்வில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே, உலகப் பொருளாதாரக் கொள்கை, இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படுத்தப்பட்டு வந்தாலும். இந்தக் கொள்கையானது நம்மைச் சகோதரர்களாக அல்ல, மாறாக அயலார்களாக ஆக்கி இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

மக்கள்தொகை பெருக்கம் வறுமைக்கானக் காரணமாக அடிக்கடி நோக்கப்படுகின்றது, மாறாக, இது அதனை அகற்றுவதற்கான வழியாக இருக்கின்றது என்றும் பேராயர் தெரிவித்தார்.

பிள்ளைகள் தங்கள் திறமைகளையும் நல்லெண்ணங்களையும் நற்பண்புகளையும் வளர்க்கும் இடம் குடும்பம் என்பதால், சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் இடம் பெற வேண்டும் என்றும் பேராயர் மிலியோரே கூறினார்.

இக்காலத்திய சமூக ஒருங்கிணைப்பில் குடியேற்றதாரரின் தேவைகள், குறிப்பாக சட்டத்துக்குப் புறம்பேயான குடியேற்றதாரரின் தேவைகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் ஐ.நா.கூட்டத்தில் உரையாற்றினார் பேராயர் செலஸ்தினோ மிலியோரே.








All the contents on this site are copyrighted ©.