2010-02-05 16:32:28

கொலம்பிய ஆயர் : படைவீரர்கள் மற்றும் காவல்துறையினரின் ஆன்மீக நலனில் அக்கறை காட்ட வேண்டியது தேவையானது மட்டுமல்ல, அது உடனடியாகச் செய்ய வேண்டியதாயும் இருக்கின்றது


பிப்.05,2010 இலத்தீன் அமெரிக்காவில் படைவீரர்கள் மற்றும் காவல்துறையினரின் ஆன்மீக நலனில் அக்கறை காட்ட வேண்டியது தேவையானது மட்டுமல்ல, அது உடனடியாகச் செய்ய வேண்டியதாயும் இருக்கின்றது என்று கொலம்பிய நாட்டு ஆயர் ஃபாபியோ ஸ்வெஸ்குன் முதிஸ் கூறினார்.

ஸ்பெயினில் இவ்வாரத்தில் நடைபெற்ற, இராணுவத்தினருக்கான 21வது சர்வதேச ஆன்மீகக் குருக்கள் கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் ஸ்வெஸ்குன், படைவீரர்கள் மற்றும் காவல்துறையினரின் பணிகள் பலநேரங்களில் மக்களால் அங்கீகரிக்கப்படுவதில்லை என்று கவலை தெரிவித்தார்.

படைவீரர்கள், தங்களின் குடும்ப மரபு, அர்ப்பணம் தியாகம் ஆகிய மதிப்பீடுகளால் ஆழமான ஆன்மீகவாதிகளாய் இருந்த போதிலும் அவர்கள் அடிக்கடி காணும் இறப்புக்கள் அவர்களில் மரண பயத்தையும் ஏற்படுத்துகின்றன என்றும் ஆயர் ஃபாபியோ ஸ்வெஸ்குன் முதிஸ் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.