2010-02-04 15:09:28

ஹாங் காங் தலத் திருச்சபை முறையீடு செய்திருந்ததை நீதி மன்றம் நிராகரித்தது


பிப்.04,2010 கல்வி சம்பந்தமாக ஹாங் காங் அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றுக்கு எதிராக அங்குள்ள தலத் திருச்சபை முறையீடு செய்திருந்ததை மேல் முறையீடு மனுக்களுக்கான நீதி மன்றம் இப்புதனன்று நிராகரித்தது. 2004ஆம் ஆண்டு வெளியான அரசாணையின்படி கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவ சபைகள் நடத்திவரும் பள்ளிகளில் முடிவெடுக்கும் சக்தியை பள்ளியின் நிர்வாகம் இழக்க வேண்டி வரும் என்ற கவலையில் இந்த முறையீடு செய்யப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கூறிய ஹாங் காங் உயர்மறைமாவட்ட அதிகாரிகள் இந்த தீர்ப்பை முற்றும் ஆராய்ந்த பிறகே தங்களது அடுத்த நடவடிக்கையைக் குறித்து சிந்திக்க முடியும் என்று கூறியுள்ளனர். எனினும், அதுவரை, தாங்கள் மேற்கொண்டுள்ள கத்தோலிக்க மதிப்பீடுகள் கொண்ட கல்வியை வழங்குவதில் ஒருபோதும் ஆர்வம் குறையப போவதில்லையெனவும் இவ்வதிகாரிகள் கூறியுள்ளனர். ஹாங் காங் உயர் மறைமாவட்டம் 320 பள்ளிகளை நடத்தி வருகிறதென்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.