2010-02-04 15:08:04

தேர்தலில் முறைகேடுகள் எனக் கூறி இலங்கையில் எதிர்கட்சியினர் பேரணி


பிப்.04,2010 இலங்கையில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி வரும் எதிரணி கட்சிகள் ஒன்றிணைந்து இப்புதனன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியையும், கண்டனக் கூட்டத்தையும் நடத்தியிருக்கின்றன.
எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஊடகங்கள் மீதான நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு தவறுகளையும் சுட்டிக்காட்டி அவற்றை நிறுத்த வேண்டும் என இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்நிலையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் வாக்கு எண்ணிக்கை மோசடிகள் போன்ற பல்வேறு குறைகளைக் குறிப்பிட்டு, இந்த முறைகேடுகளின் அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகளை நிராகரிக்க வேண்டும் என எதிரணிக்கட்சிகளின் பொது வேட்பாளராகிய சரத் பொன்சேகா அவர்கள் தேர்தல் ஆணையாளருக்கு இப்புதன்கிழைமை எழுத்து மூலமான முறைப்பாட்டைச் செய்திருந்தார். எனினும் ஜனாதிபதி தேர்தல் நியாயமான முறையிலேயே நடந்து முடிந்துள்ளது என தேர்தல் ஆணையாளர் தாயனந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.