2010-02-04 15:08:36

எளிமையான பயிற்சிகள் மூலம் மனநலத்தைப் பேண முடியும்


பிப்.04,2010 உடல் நலத்தை நன்றாக வைத்துக்கொள்ள எடுக்கப்படும் எளிமையான பயிற்சிகள் மூலமாக ஒருவர் தனது மனநலத்தையும் பேண முடியும் என்று தெரியவந்துள்ளது.
டிமென்ஷியா எனப்படும் மூளைக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு எளிய உடற்பயிற்சிகளால் இருபது சதவீதம் குறைகிறது என புதிய ஆராய்ச்சிகள் குறிப்புணர்த்துகின்றன.
உடற் பருமன், இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக்கொள்ள எந்த வயதில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினாலும் அதனால் பலருக்கு டிமென்ஷியா மனநோய் வரும் வாய்ப்பு குறைகிறது என சர்வதேச நிபுணர் குழு ஒன்று ஊடகத்துறை ஒன்றிற்கு வழங்கிய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. குறுக்கெழுத்து, மனக்கணக்கு போன்ற மூளைக்கு வேலை தரும் பயிற்சிகளைப் பழகுவதால் டிமென்ஷியா மூளைக் கோளாறு வருவதற்கான ஆபத்து குறையும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் அப்படி குறையும் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.







All the contents on this site are copyrighted ©.