2010-02-03 15:23:19

வேளாங்கண்ணியில் அகில இந்திய குருக்கள் மாநாட்டில் 1000க்கும் மேற்பட்ட குருக்கள் கலந்து கொள்வார்கள் 


பிப்.03,2010 இம்மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வேளாங்கண்ணியில் நடைபெறவிருக்கும் அகில இந்திய குருக்கள் மாநாட்டில் இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட மறை மாவட்டங்களிலிருந்து 1000க்கும் மேற்பட்ட குருக்கள் கலந்து கொள்வார்கள் என்று இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்து வரும் அருட்தந்தை முனைவர் ஜான் குழந்தை கூறியுள்ளார்.
குருக்களின் ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில் இந்தியாவின் அனைத்து ரீதிகளையும் சார்ந்த மறைமாவட்ட குருக்களும், துறவற குருக்களும் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றும் இம்மாநாட்டிற்கான திட்டங்கள் சென்ற ஆண்டு மே மாதம் முதல் வகுக்கப்பட்டன என்றும் அருட்தந்தை ஜான்  குழந்தை செய்தித் தாளொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், இந்த மாநாட்டினை துவக்கி வைக்க குருக்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Claudio Hummes வத்திக்கானிலிருந்து வரவிருப்பதாகவும், தமிழ் நாட்டு இணை முதல் அமைச்சர் ஸ்டாலின் இந்தத் துவக்க விழாவுக்குத் தலைமை தாங்குவார் என்றும் கர்தினால் Oswald Gracias உட்பட திருச்சபையையும், அரசையும் சார்ந்த பல தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் அருட்தந்தை ஜான்  குழந்தை கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.