2010-02-03 14:24:43

பிப்ரவரி 04. நாளும் ஒரு நல்லெண்ணம்


மனிதன் நோயைத் தவிர்த்துக்கொள்ள எப்போதும் அக மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பர். பணம் தேடுவதோ பொருள் தேடுவதோ பெரிதல்ல மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் எந்த நோயும் அண்டாது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி தற்போது ஆண்டுக்கு 79 லட்சம் மக்கள் புற்றுநோயால் மரணமடைகிறார்கள் என்றும், இது 2030 ஆண்டில் ஆண்டுக்கு 1கோடியே 20 லட்சம் மக்களாக உயரும் என்றும், தற்போது ஆண்டுக்கு 1 கோடியே 13 லட்சம் மக்கள் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இது 2030ம் ஆண்டில் 1 கோடியே 50 லட்சமாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நவீன சிகிச்சைகளின்படி இந்நோயை மிக மிக ஆரம்ப காலத்திலேயே கண்டறியும் பட்சத்தில் நோயிலிருந்து முழுமையாகச் சுகம் பெறலாம்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பழக்க வழக்கங்களை சீரான முறையில் பேணினால் வாழ்க்கை சிறப்புறும்.

நம் உடலை பேணி காக்கும் கடமையும் சுதந்திரமும் நமக்குத்தான் உள்ளது.

சுதந்திரம் என்பது என்ன?

சுதந்திரம் என்பது ஒரு சார்பு வார்த்தை. அது சிலருக்கான சுதந்திரமே; எல்லோருக்குமானது அல்ல என்பார் கவிஞர் ஒருவர்.

வெறுமனே, வெள்ளை ஆட்சியாளர்கள் கூட்டம் போய், அதே போன்ற வேறு ஆட்சியாளர்கள் கூட்டம் வருவதற்கு, நாம் விடுதலையடைந்து விட்டோம் என்பது பொருளல்ல என்றவரும் அவரே.

சுதந்திரம் என்றால் என்ன? விட்டு விடுதலையாவதா? எதை விட்டு, எப்படி விடுதலையாகி, எங்கு செல்வது?

சுரண்டுவதற்கான உரிமையை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்த ஒப்பந்தமே சுதந்திரம், என்றும்

மண்ணுக்கு கிடைத்தது எப்போது மனிதனுக்கு கிட்டும், என்றும் கேள்வி எழுப்பும்

கவிஞர் ஒருவர் கூறுவார் –

எதைப்பற்றி நினைத்தால்

கவிதை வராமல் கண்ணீர் வருகிறதோ

அதுவே சுதந்திரம். என்று.








All the contents on this site are copyrighted ©.