2010-02-03 15:24:59

துறவறச் சபைகளைச் சார்ந்தவர்களில் குறைந்தது 50 பேராவது ஹெயிட்டியின் நிலநடுக்கத்தில் இறந்திருக்கக்கூடும் 


பிப்.03,2010 துறவறச் சபைகளைச் சார்ந்த குருக்கள், சகோதரர்கள், கன்னியர் இவர்களில் குறைந்தது 50 பேராவது ஹெயிட்டியின் நிலநடுக்கத்தில் இறந்திருக்கக்கூடும் என்று அண்மையில் வெளியான ஒரு அறிக்கை கூறுகிறது. சனவரி 12ஆம் தேதி ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 1,70,000 பேர் வரை இறந்திருக்கக்கூடும் என்றும் அவர்களில் இதுவரை 47 துறவறத்தார் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இன்னும் பல மறைபணிக் குழுக்களிலிருந்து தகவல்கள் வந்து சேரவில்லை என்றும் Fides என்ற செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. பல்வேறு துறவு சபைகளின் இல்லங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள் இந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்ததால் அந்த இடுபாடுகளில் சிக்கி, இத்தனை துறவறத்தார் உயிரிழந்தனர் என்று இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.