2010-02-03 15:24:18

ஒப்புரவு அருட்சாதனம் பற்றி இணையதள முயற்சி பாஸ்டன் உயர்மறைமாவட்டம்


பிப்.03,2010 மேலும் இணையதளத்தின் மூலம் ஒப்புரவு அருட்சாதனம் பற்றி அறிந்து கொள்வதற்கும், ஒப்புரவு அருட்சாதனம் எந்தெந்த கோவில்களில் எந்தெந்த நேரங்களில் கிடைக்கும் என்ற தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் அமெரிக்காவின் பாஸ்டன் உயர்மறைமாவட்டம் இணைவலம் ஒன்றைத் துவங்கியுள்ளது. இம்மாதம் ஆரம்பமாகவிருக்கும் தவக்காலத்தை ஓட்டி இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதென பாஸ்டன் உயர்மறைமாவட்ட துணை ஆயர் Robert F.Hennessey கூறினார். இந்த இணையதளத்தில் அவர் உரையாற்றுகையில், ஒவ்வொரு முறையும் ஒருவர் ஒப்புரவு அருட்சாதனத்தை நாடி வரும் போது, விண்ணகத்தில் பெரு மகிழ்ச்சி உண்டாகிறது என்றும், ஒப்புரவு அருட்சாதனத்தின் மூலம் பாவத்தளைகளிலிருந்து ஒருவரை மீட்கும் போது, குருக்கள் அந்த அருட்பணியின் மூலம் பெருமகிழ்வடைகின்றனர் என்றும் துணை ஆயர் குறிப்பிட்டுள்ளார். www.TheLightIsOnForYou.org என்ற இந்த இணையதளத்தின் மூலம் மக்கள் உள்ளத்தில் குணமடைவதற்கும், கிறிஸ்துவுடன் மீண்டும் நட்புறவை ஆழப்படுத்துவதற்ம் ஒரு வாய்ப்பு எழுந்துள்ளதென பாஸ்டன் துணை ஆயரும்,  கர்தினால் Sean O Malley யும் தெரிவித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.