2010-02-03 15:23:39

அமைதிக்கான புத்தமதத்தின் கௌரவமிக்க விருது கத்தோலிக்கக் குரு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது


பிப்.03,2010 “சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான” உலக புத்தமத அவையின் விருது இவ்வாண்டு முதன்முறையாக கத்தோலிக்க அருட்பணியாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேச்சாளராகிய அருட்பணியாளர் ஆனந்த் முட்டுங்கல் (Anand Muttungal), புத்தமத சமூகத்தின் கௌரவமிக்க இவ்விருதை சனவரி 31ம் தேதி பெற்றுள்ளார்.
இவ்விருதைப் புத்தமதத்தைச் சாராத ஒருவர் பெற்றிருப்பது இதுவே முதன்முறையாகும். போபாலில் நடைபெற்ற சர்வதேச புத்தமதக் கூட்டத்தில் புத்தமத மூத்த துறவி Bhadant Arya Nagarjun Surai Sasai இதனை வழங்கினார்.38 வயதாகும் அருட்பணியாளர் ஆனந்த் முட்டுங்கல், அமைதிக்காக எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டி Adishakti Sahitya Kala Parishad என்ற இலக்கிய நிறுவனம் 2008ம் ஆண்டில் அவரைக் கௌரவித்துள்ளது. 2007ம் ஆண்டில் சீக்கிய நிர்வாகக் குழுவும் இந்த அருட்பணியாளரின் அமைதிக்கான பணிகளைப் பாராட்டி கௌரவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.