2010-02-03 15:25:20

"We Are the World" என்ற புகழ் பெற்ற பாடல் ஹெயிட்டிக்காக மீண்டும் மறுபதிவு 


பிப்.03,2010 இதற்கிடையே, மறைந்த புகழ்பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சன், மற்றும் லயனல் ரிச்சி ஆகியோரால் 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "We Are the World" என்ற புகழ் பெற்ற பாடலைக் கொண்ட குறுந்தகடு வெளியிடப்பட்ட வெள்ளி விழாவைக் குறிக்கும் இவ்வாண்டு, லயனல் ரிச்சி, Quincy Jones ஆகிய புகழ் பெற்ற பாடகர்கள், உலகப் புகழ் பெற்ற மற்றும் பல பாடகர்களைக் கொண்டு அதே பாடலை மீண்டும் மறுபதிவு செய்து ஹெயிட்டிக்காக "We Are the World-25 for Haiti" என்று பெயரிட்டு, உருவாக்கியுள்ளனர் என்று செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது. 1985ல் வெளியான இந்தப் பாடல் ஆப்ரிக்காவில் நிலவிய பஞ்சத்தைப் போக்க 150 கோடி ரூபாய் திரட்டியது என்றும், இந்தப் புதிய பாடல் கனடாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவில் முதன்முறையாக வெளியிடப்பட்டு, அந்த இசைத்தட்டின் விற்பனை மூலம் திரட்டப்படும் பணம் முழுவதும் ஹெயிட்டிக்கு வழங்கப்படும் என்றும் அச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.