2010-02-02 17:18:33

மலேசியாவில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டது தொடர்பாக மேலும் 4 இஸ்லாமியர்கள் மீது வழக்கு


பிப்.02,2010 மலேசியாவில் அண்மைக்காலங்களில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டது தொடர்பாக மேலும் 4 இஸ்லாமியர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

'அல்லா' என்ற பெயரை இறைவனைக் குறிப்பிடுவதாக கிறிஸ்தவர்களும் பயன்படுத்தலாம் என மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் சனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இரு கோவில்களும் ஒஉர் கிறிஸ்தவ பள்ளியும் வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டன.

19 21 மற்றும் 28 வயதுடைய மூன்று வாலிபர்களையும் 17 வயதுடைய ஒரு சிறுவனையும் இது தொடர்பாக கைது செய்துள்ள காவல் துறை, ஏற்கனவே இது தொடர்பாக மூவரைக் கைது செய்து வைத்துள்ளது.

மத வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவர்களுக்கு 20 ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் காவல் துறை அறிவித்துள்ளது.

இது குறித்த அடுத்த கட்ட விசாரணை மார்ச் 24 ஆம் தேதிக்கென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.