2010-02-02 15:21:52

பிப்ரவரி, 03 - நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3
புத்தர் ஒருமுறைச் சொன்ன கதை இது:
ஒரு மனிதனை புலி ஒன்று துரத்தியது. அந்தப் புலியிடமிருந்து தப்பிக்க, அவன் ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு, செங்குத்தான ஒரு பள்ளத்தாக்கில் குதித்தான். கொடியின் உதவியுடன் தொங்கிக் கொண்டிருந்தான். கீழே பார்த்தால், அங்கே மற்றொரு புலி பசியோடு காத்திருந்தது. அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த கொடியை இரு எலிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் அருகில் வளர்ந்திருந்த ஒரு செடியில் சுவைமிக்க ஒரு பழம் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தான் மனிதன். தன முயற்சியை எல்லாம் கூட்டி, ஒரு கையால் அந்த கொடியைப் பற்றிக் கொண்டு, மறு கையால், அந்த பழத்தைப் பறித்து சுவைத்தான். பழம் கூடுதலான சுவையுடன் இருந்ததைப் போல் உணர்ந்தான். நம்மில் பலர் வாழும் வாழ்வை இந்தக் கதை படம் பிடித்துக் காட்டுகிறதல்லவா?







All the contents on this site are copyrighted ©.