2010-02-02 17:16:15

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து ஜெர்மன் உதவி அமைப்பு ஆழ்ந்த கவலை


பிப்.02,2010 பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது Aid to the Church in Need என்ற உதவி அமைப்பு.

12 வயது கத்தோலிக்க சிறுமி ஒருவர் தான் வேலை செய்த வீட்டு உடமையாளரால் கற்பழித்துக் கொல்லப்பட்டது குறித்தும், இவ்வழக்கை பதிவு செய்ய முதலில் காவல்துறை மறுத்தது குறித்தும் எடுத்துரைத்த இவ்வமைப்பு, இதையொத்த வன்முறை நிகழ்வுகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பாகிஸ்தானில் தொடர்ந்து இடம் பெற்ற வருவது குறித்தும் சுட்டிக்காட்டியது.

உலகின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே அத்துமீறி நுழைந்தவர்கள் போல் நோக்கப்படுவதாகவும் மேற்கத்திய நாடுகளுடன் தொடர்புபடுத்திக் காணப்படுவதாகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியது ஜெர்மனியை மையமாகக் கொண்ட Aid to the Church in Need அமைப்பு.

பாகிஸ்தான் காவல்துறையும் அரசும் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறி வருவதாக அந்நாட்டு கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது இவ்வமைப்பு.

ஷாசியா பாஷீர் என்ற 12 வயது கிறிஸ்தவ சிறுமி கற்பழித்துக் கொல்லப்பட்டது குறத்த வழக்கு விசாரணை இப்புதனுக்கென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.