2010-02-02 17:12:38

தடுப்புக் காவலில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் விடுவிக்கப்பட மனித உரிமைகள் அமைப்பு வேண்டுகோள்.


பிப். 02. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏறத்தாழ 11 ஆயிரம் பேர் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளது முடிவுக்கு கொணரப்படவேண்டும் என இலங்கை அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது Human Rights Watch என்ற மனித உரிமைகள் அமைப்பு.
தேசத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் என்று நோக்கப்படுபவர்கள் மட்டும் சிறைவைக்கப்பட்டு, எனையோர் நிபந்தனியின்றி விடுவிக்கப்படவெண்டும் எனக்கூறும் New Yorkஐ தலைமையகமாகக் கொண்ட இம்மனித உரிமைகள் அமைப்பு, சிறைவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் தங்கள் குடும்பங்களையோ, வழக்குரைஞர்களையோ சந்திக்க அனுமதிக்கப்படாததையும் சுட்டிக்காட்டியுள்ளது.
புனர்வாழ்வு மையங்கள் என்ற பெயரில் சந்தேகத்திற்குரிய தமிழர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் Human Rights Watch அமைப்பு, 1 லட்சம் பேர் வரை இன்னும் குடியமர்த்தப்படாமல் முகாம்களிலேயே இருப்பதையும் எடுத்துரைத்துள்ளது.
இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் மீதான நடவடிக்கைகள் மற்றும் பத்திரிகைத் துறையினர் காணாமற்போவது குறித்து இலங்கை அரசை குறை கூறியுள்ளது Amnesty International எனும் மனித உரிமைகள் அமைப்பு.







All the contents on this site are copyrighted ©.