2010-02-02 17:17:22

இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்களுக்கெதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன- கிறிஸ்தவர்கள் கவலை


பிப்.02,2010 மீண்டும் பதவிக்கு வந்துள்ள இந்தோனேசிய அரசுத்தலைவர், மத விடுதலையைக் காப்பாற்றத் தவறியுள்ளதால், கிறிஸ்தவர்களுக்கெதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக இந்தோனேசியா கிறிஸ்தவர்கள் குறைகூறியுள்ளனர்.

அரசுத் தலைவர் Susilo Bambang Yudhoyono மீண்டும் பதவியேற்ற 100 நாட்களுக்குள்ளேயே 18 கத்தோலிக்க மற்றும் Prostestant கிறிஸ்தவ கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக உரைத்த கத்தோலிக்க குரு Benny Suxtyo முந்தைய மத விவகார அமைச்சர்கள் எந்த தனிப்பட்ட கட்சியையும் சாராதவர்களாக இருந்தனர், தற்போதோ அப்படி இல்லை என்பதே அத்துமீறல்களைக் கண்டு கொள்ளாமல் விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றார்.

தற்போது கிறிஸ்தவ வழிபாட்டு தளங்கள் இந்தோனேசியாவில் தொடர்ந்து தாக்கப்படுவது அரசுத் தலைவரின் பாரா முகம் மற்றும் மௌனத்தாலேயே தொடர்கிறது என்பது போல் தோன்றுவதாகவும் கூறியுள்ளனர் கிறிஸ்தவ தலைவர்கள்







All the contents on this site are copyrighted ©.