2010-01-30 15:03:26

இந்தியாவில் தொழு நோயாளர் மத்தியிலான பணிக்கு, கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்-அருட்தந்தை விஜய் ராயராலா


சன.30,2010 இந்தியாவில் கடந்த 2000 ஆண்டுகளாக தொழு நோயாளர் மத்தியிலான பணிக்கு, கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் என்று PIME சபை அருட்தந்தை விஜய் ராயராலா கூறினார்.

விண்ணகக் கதவு என்று பொருள்படும் Swarga Dwar என்ற தொழுநோயாளர் மறுவாழ்வு மையத்தை மும்பைக்கு அருகில் நடத்தி வரும் அருட்தந்தை விஜய் ராயராலா, இந்தியாவில் தொழுநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என அரசு அறிவித்துள்ளது எனினும், தொழுநோயிலிருந்து குணமானவர்களுக்கான மறுவாழ்வுப் பணி அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறினார்.

இயேசு, புனிதர்கள் பிரான்சிஸ் அசிசி, தமியான், காந்தி போன்றோரின் பாதையில் கிறிஸ்தவர்களும் தொழுநோயாளர் மத்தியில் மிகுந்த அர்ப்பணத்துடன் சேவையாற்றுகின்றனர் என்றும் அக்குரு தெரிவித்தார்.

இந்தியாவில் பத்தாயிரம் பேருக்கு ஒருவர் வீதம் தொழுநோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.