2010-01-28 16:07:34

வீடற்றோர் என்ற நிலையை முற்றிலுமாக ஒழிக்கும் புதிய திட்டம் - காரித்தாஸ்


சன.28,2010 வீடற்றோர் என்ற நிலையை முற்றிலுமாக ஒழிக்கும் புதிய திட்டம் ஒன்றைத் துவக்கி இப்புதன்முதல் தன் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

பிரசல்லஸ்சின் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இதனைத் துவக்கியுள்ள காரித்தாஸ் அமைப்பு, தெருவில் வாழும் நிலைக்கு எவரும் தள்ளப்படக் கூடாது, மருத்துவ செலவுக்குப் பணமின்மையால் எவரும் இறக்கக் கூடாது என்ற இரு நோக்கங்களுடன் இத்திட்டம் செய்யப்படவுள்ளதாகக் கூறியது.

ஏழ்மை எனும் சமூகத்தீமை, போதிய நிதி ஆதாரம் இன்மையால் நிகழவில்லை மாறாக போதிய நலஆதரவு திட்டங்கள் இன்மையால் ஏற்பட்டுள்ளது என உரைத்தார் ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் தலைவர் எர்னி ஜில்லென்.

ஏழ்மையின் பின்விளைவுகளுக்குப் பதிலளிப்பதை விடுத்து ஏழ்மையின் மூலகாரணங்கள் களைந்தெரியப்பட வேண்டும் எனவும் உரைக்கும் காரித்தாஸ் அமைப்பு, ஏழ்மை எனும் குறியீடு அகற்றப்பட்டு மனிதன் முழுமாண்பில் வாழ்ந்து தன்னிறைவு பெற்றவர்களாய்ச் செயல்பட உதவுவதே தங்கள் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.