2010-01-28 16:03:49

கத்தோலிக்கத் திருச்சபையின் பிறரன்புப் பணிகளுக்குப் பிரிட்டன் அரசியல்வாதி பாராட்டு


சன.28,2010 சர்வதேச அளவிலான உதவிகள், குறிப்பாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி மக்களுக்கான உதவிகள் கிடைப்பதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றி வரும் சேவைக்கு நன்றி தெரிவித்தார் சர்வதேச வளர்ச்சிக்கான பிரிட்டன் அரசின் செயலர் டக்லஸ் அலெக்ஸாண்டர்.

இவர், திருத்தந்தை 16ம் பெனடிக்டை இவ்வாரத்தில் திருப்பீடத்தில் சந்தித்த போது தனது நன்றியை தெரிவித்ததோடு உலகலாவிய வறுமை பற்றியும் பேசினார் என்று செனிட் செய்தி நிறுவனம் கூறியது.

திருத்தந்தையைச் சந்திப்பது குறித்து தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ள அலெக்ஸாண்டர், வறுமையை ஒழிப்பதற்கானத் திருப்பீடத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாகத் தெரிகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்துள்ள பகுதிகளில் இடம் பெறும் நான்கில் ஒரு பகுதி நலவாழ்வுப் பணிகளைக் கத்தோலிக்கத் திருச்சபை செய்து வருகின்றது என்றும் ஏறத்தாழ ஒரு கோடியே இருபது இலட்சம் கத்தோலிக்கப் பள்ளிகள் சேவையாற்றுகின்றன என்றும் பிரிட்டன் அரசியல்வாதி அலெக்ஸாம்டர் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.