2010-01-27 15:32:01

பிரான்சில் முகத்திரை முக்காடு அணியத் தடை


சன.27,2010 பிரான்ஸில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும்போது முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் முக்காடுகளை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
அடிப்படை மதவாதத்தால் தூண்டப்பட்டு  இம்முகத்திரைகளை அணிவதிலிருந்து விலக மறுக்கும் பெண்களுக்கு பிரான்ஸில் தங்குவதற்கான அனுமதி அட்டைகள், குடியுரிமை போன்றவற்றை வழங்கக்கூடாது என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என்று கூறுவது பிரஞ்சுக் குடியரசின் விழுமியங்களான மதச்சார்பின்மை, சமத்துவம் போன்ற கொள்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என இந்தக் குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.