2010-01-27 15:31:08

பன்றிக்காய்ச்சலை கையாண்ட விதம் குறித்து உலக சுகாதார நிறுவனம் மீது விமர்சனம்


சன.27,2010 கடந்த ஆண்டு உலக நாடுகளில் பரவிய பன்றிக்காய்ச்சலை, உலக சுகாதார நிறுவனமும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களும் கையாண்ட விதம் குறித்து அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக் கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான அமைப்பான ஐரோப்பிய குழுமத்தில் இது தொடர்பாக நடந்த விசாரணையின்போது, மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வந்த நிர்ப்பந்தத்தின் காரணமாக பன்றிக்காய்ச்சல் வைரஸின் ஆபத்து குறித்து உலக சுகாதார நிறுவனம் மிகைப்படுத்தி காட்டியதாக அதன் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
பன்றிக்காய்ச்சல் ஆபத்தானதொரு நோயென கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இதன் விளைவாக, இந்த நோய் தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக இருக்கும் என்கிற அச்சத்தில், பல ஐரோப்பிய நாடுகள் இதற்கான தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வாங்கிக் குவித்தன. பன்றிக்காய்ச்சல் காரணமாக உலகஅளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருந்தாலும், ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதைப்போல இந்த வைரஸ் கடுமையானதாக இருக்கவில்லை.







All the contents on this site are copyrighted ©.