2010-01-26 13:47:24

ஹைய்ட்டியில் சேதமடைந்துள்ள திருச்சபைக் கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு அமெரிக்க தலத்திருச்சபை உதவி


சன.26,2010 ஹைய்ட்டியின் அண்மை நிலநடுக்கத்தால் அழிவுக்குள்ளான திருச்சபைக் கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை உதவ உள்ளதாக சிகாகோ பேராயர் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் அறிவித்தார்.

ஏற்கனவே உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பியுள்ள அமெரிக்கத் தலத்திருச்சபை, திருச்சபைக் கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான நிதியுதவியையும் வழங்கவுள்ளதாக ஹைய்ட்டி ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் லூயிஸ் கெபுருவோவுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ் எழுதியுள்ள கடிதத்தில் உறுதி வழங்கியுள்ளார்.

ஹைய்ட்டி தலத்திருச்சபை தனியாக இல்லை என்பதை காண்பிக்கவும் அவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாகவும் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பங்குத்தளங்களில் ஹைய்ட்டி நாட்டிற்கான உதவிநிதி வசூல் நடந்து வருவதாகவும் கூறினார் சிகாகோ கர்தினால் ஜார்ஜ்







All the contents on this site are copyrighted ©.