2010-01-25 15:41:55

வளர்ச்சித் திட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் - கொரிய தலத் திருச்சபை அழைப்பு


சன.25,2010 அவசர கால நிவாரணப் பணிகளுக்கு என பணத்தை செலவழிப்பதை விட, வளர்ச்சித் திட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது கொரிய தலத் திருச்சபை.
உலகில் அவசரகாலப் பணிகளைவிட வளர்ச்சித் திட்டங்களே நீண்ட காலப் பயனுடையதாய் இருக்கும் என்ற கொரிய காரித்தாஸ் கருத்தரங்கு, கடந்த 30 ஆண்டுகளில் ஆப்ரிக்காவுக்கென உலகம் 3.2 trillion டாலர்களை அனுப்பியும் அக்கண்டத்தின் பசி தீர்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியது.
ஏழ்மையின் விளைவுகள் அல்ல, மாறாக, அதன் காரணங்கள் கண்டறியப்பட்டு களையப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது கொரிய கத்தோலிக்க காரித்தாஸ்  அமைப்பு. 2006க்கும் 2008க்கும் இடைப்பட்டக் காலத்தில் கொரிய தலத்திருச்ச்சபை ஏறத்தாழ ஒரு கோடியே அறுபது லட்சம் டாலர்களை நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.