2010-01-23 14:36:49

சனவரி 24 - நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை என்பது நாம் அடிக்கடி கேட்கும் ஒரு அழகிய வாழ்த்து. இப்படி ஒருமுறை வாழ்வதை கடந்த அல்லது எதிர் காலங்களில் வாழாமல், நிகழ் காலத்தில் வாழ்ந்தால், ஒரு தலைமுறை அல்ல... பல தலைமுறைகள் நம்மை வாழ்த்தும்.
இன்று வாழ்வதை, இப்போது வாழ்வதைப் பற்றி பலர் பல வகையில் கூறியுள்ளனர். அவைகளில் ஒரு சில இதோ:
தொலைபேசியைக் கண்டுபிடித்த Alexander Graham Bell சொன்னது இது: "ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கிறது. மூடிய கதவையே நாம் ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதால், திறந்துள்ள கதவைப் பார்க்கத் தவறுகிறோம்” என்று.
"கடந்த காலத்தை மார்போடு அணைத்துக்கொள்ளும் போது, நிகழ்காலத்தை அணைக்க கைகளும், மார்பில் இடமும் இல்லாமல் போகும்." இதைச்சொன்னவர் Jan Glidewell.
"எந்த ஒரு செல்வந்தனாலும், கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்க முடியாது." இப்படி சொல்லியிருக்கிறார் Oscar Wilde.ஒன்றே செய்யினும், நன்றே செய்கவென்றும், நன்றே செய்யினும் இன்றே செய்கவென்றும் நம் தமிழ் மரபில் சொல்லிவந்திருக்கிறோம். செயல் படுத்துவோம் இன்றே. இப்போதே.







All the contents on this site are copyrighted ©.