2010-01-22 15:23:52

வடகொரியாவில் ஏறத்தாழ இரண்டு இலட்சம், அரசியல் மற்றும் சமயக் கைதிகள் உள்ளனர்-கொரிய தேசிய மனித உரிமைகள் குழு


சன.22,2010 வடகொரிய கம்யூனிச நாட்டில் ஏறத்தாழ இரண்டு இலட்சம், அரசியல் மற்றும் சமயக் கைதிகள் உள்ளனர் என்று கொரிய தேசிய மனித உரிமைகள் குழுவின் அறிக்கை கூறுகிறது.
தென்கொரியத் தலைநகர் Seoul லில் இக்குழு வெளியிட்ட அறிக்கையில், பல நிறுவனங்களிடம் சேகரித்த தகவல்கள் மற்றும்பிற புலனாய்வுகள் மூலம், வடகொரியாவில் அரசியல் கைதிகளுக்காக ஆறு முகாம்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
சில முகாம்களில், இந்த அரசியல் கைதிகள் சங்கிலிகளால் கட்டப்பட்டு காலவரையறையின்றி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இந்த அரசியல் கைதிகள் விசாரணைகள் எதுவுமின்றி இரகசியமாகத் தூக்கிலிடப்படுவது உட்பட இவர்கள்மீது ஏறக்குறைய எல்லாவிதமான மனித உரிமை மீறல்களும் நடத்தப்படுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
 அந்நாட்டில் சமய நடவடிக்கைகள் எதுவும் நடக்காததால், ஒவ்வொரு மதத்தினரும், அரசின் அடக்குமுறைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அம்மனித உரிமைகள் குழு கூறியது.







All the contents on this site are copyrighted ©.